நீதிபதி T.சரவணராஜா சுயாதீனமாக தனது கடமைகளை ஆற்றக்கூடிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை

நீதிபதி T.சரவணராஜா சுயாதீனமாக தனது கடமைகளை ஆற்றக்கூடிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை

நீதிபதி T.சரவணராஜா சுயாதீனமாக தனது கடமைகளை ஆற்றக்கூடிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்: யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை

எழுத்தாளர் Bella Dalima

30 Sep, 2023 | 5:23 pm

Colombo (News 1st) நீதிபதி T.சரவணராஜா இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியானது, ஜனநாயகத்தையும் நீதியையும் மதிக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விடயம் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. 

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், இனவாதத்தினை கையில் எடுக்கும் அரசியல் சக்திகள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பிவிட முயற்சி செய்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாத தரப்புகளையும் மக்களின் நலனில் அக்கறையற்ற இந்த அரசாங்கத்தினையும் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருக்கும் நீதிபதி சரவணராஜா மீளவும் தன் பதவிக்கு திரும்பி, சுயாதீன முறையில் தனது கடமைகளை ஆற்றக்கூடிய நிலையினை அரசாங்கம் உடனடியாக ஏற்படுத்த  வேண்டும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகல் காரணமாக நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாக யாழ்ப்பாண  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக நீதிபதி பொறுப்பில் இருந்து விலகி, நாட்டில் இருந்து வௌியேறியுள்ளமை நீதித்துறையின் நம்பகத்தன்மை தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் ஊடாக நீதித்துறைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் எவ்வாறு சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கப்போகின்றது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தமது அறிக்கையின் ஊடாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்