சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இடைநிறுத்தம்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு இடைநிறுத்தம்

by Bella Dalima 30-09-2023 | 4:27 PM

Colombo (News 1st) சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று (30) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருந்தாலும் நெல் கிடைக்காமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்தார்.

இதனால் களஞ்சியசாலைகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தினால் நாட்டரிசிக்கு கொள்வனவு விலையாக  95 ரூபா  அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அனைத்து மாவட்டங்களிலும் 100 மற்றும் 110 ரூபாவுக்கு தனியாரால் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக  நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்தார்.

இந்த நிலையில், 25 இலட்சம் கிரோகிராம் நெல் மாத்திரமே இதுவரையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நெல் கிடைக்காத நிலையில், களஞ்சியசாலைகளை  நடத்திச்செல்வதில் உள்ள செலவீனங்களை கருத்திற்கொண்டு, அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக்க இத்தமல்கொட தெரிவித்தார்.