.webp)
Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நுவரெலியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 1,37,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கடுகன்னாவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, மீரந்தெனிய பகுதியை சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, மஹர, பன்னல, கோட்டை, கேகாலை, தம்புள்ளை, நுவரெலியா, காலி, பலப்பிட்டிய, அனுராதபுரம், நுகேகொட, களுத்துறை, புதுக்கடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.