.webp)
Colombo (News 1st) ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று(28) தாமதமாகின.
அத்துடன், மற்றுமொரு விமானப் பயணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகரான டாக்கா நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானமையினால் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த விமானப் பயணம் தாமதமடைந்தமையினால், பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவிருந்த UL 153 இலக்க விமானப் பயணத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்தியாவின் சென்னை நோக்கி பயணித்த UL 141 இலக்க விமானத்தை தரையிறக்குவதில் இன்று(28) காலை தாமதம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.