.webp)
Colombo (News 1st) நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால் மொரவக்க - போருபிட்டிய பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
போருபிட்டிய பிரதேசத்தில் 8 வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தெனியாய - அக்குரஸ்ஸ பிரதான வீதியின் ஒரு சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மொரவக்க - பரகடுவ பிரதான வீதியின் நில்வலா கங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பரகடுவ பாலத்தின் அடைப்பினை சுத்தம் செய்யும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.
மொரவக்க - நெலுவ பிரதான வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதோடு, இப்பாதையூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, மொரவக்க சந்தைக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளன.