ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

by Staff Writer 28-09-2023 | 7:53 AM

Colombo (News 1st) இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் கடினமான அனுபவங்களை எதிர்கொண்டமையை ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக நபிகள் நாயகத்தினால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.