மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு

இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனத்தின் மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு

by Staff Writer 28-09-2023 | 10:26 PM

Colombo (News 1st) இந்த மாதம் முதல் இலங்கை  தனியார் மின்சக்தி  நிறுவனம் அல்லது  LECO-வின் மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னர்  மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.

சட்ட ரீதியிலான சிக்கல்  காரணமாக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின் கட்டணத்துடன் அதனை சேர்க்க முடியவில்லையென அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும்,  தற்போது சட்டப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.