அடுத்தவாரம் முதல் பெரும்போகத்திற்கு நீர் விநியோகம்

அடுத்த வாரம் முதல் பெரும்போகத்திற்கான நீர் விநியோகம் ஆரம்பம்

by Chandrasekaram Chandravadani 28-09-2023 | 10:00 AM

Colombo (News 1st) பெரும்போகத்திற்கான நீரை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் திறந்துவிடத் தீர்மானித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முதலில் கலா வாவி ஊடாக யோத கால்வாய்க்கு நீர் திறந்துவிடப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மகாஇலுப்பல்லம, கட்டியாவ, கலா வாவி, இபலோகம ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அத்துடன், நவம்பர் முதலாம் திகதி முதல் மகாவலி அதிகாரசபைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் நீர் திறந்துவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.