English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
28 Sep, 2023 | 4:49 pm
Colombo (News 1st) பசுபிக் பெருங்கடலில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. எனினும், ஒரு கண்டமே மறைந்திருப்பதாக புவியியலாளர்கள் கூறி வந்த நிலையில், அவர்கள் அதன் வரைபடத்தை தற்போது உருவாக்கியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில், நியூசிலாந்தின் கரையோரத்தில் முன்னர் எப்போதும் அறியப்படாத ஒரு கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சீலந்தியா அல்லது மாவோரி மொழியில் Te Riu-a-Māui என்று அதற்கு பெயரிடப்பட்டது.
Zealandia அல்லது Te Riu-a-Maui என பெயரிடப்பட்டுள்ள குறித்த கண்டத்தை பற்றி இன்னும் பல விடயங்களைத் தேடி ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
பூமியில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே சீலந்தியா கண்டம் கடலுக்கடியில் சென்றிருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.
நீருக்கடியில் இக்கண்டம் எப்போது சென்றது என்பது தௌிவாகத் தெரியாத போதும், இதனை உலகின் 8 ஆவது கண்டமாக அறிவிக்கும் முயற்சியிலும் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
எனினும், தென் தமிழகத்தில் இந்திய பெருங்கடலில் லெமூரியா கண்டம் கடலுக்குள் மூழ்கி இருப்பதாகவும், தமிழர்கள் இங்குதான் தோன்றினர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் பார்த்தால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சீலந்தியா 9-வது கண்டமா என்ற கேள்வியையும் அறிவியலாளர்கள் எழுப்பி உள்ளனர்.
ஏறக்குறைய 375 ஆண்டுகளாக வெற்றுப் பார்வையில் இருந்து மறைந்திருந்த இந்த கண்டமானது நியூசிலாந்திற்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய கண்டத்தின் 94% பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.
இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும் தெரிவித்துள்ளனர்.
சீலந்தியா சுமார் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான கோண்ட்வானா (Gondwana) மீப்பெருங்கண்டதின் ஒரு பகுதியாக இருந்தது. அடிப்படையில் தெற்கு அரைக்கோளத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் இது ஒன்றாக இணைத்திருந்தது.
இந்நிலையில், புவியியலாளர்கள், நில அதிர்வு ஆய்வாளர்கள் இணைந்த குழு ஒன்று இந்த கண்டத்தின் வரைபடத்தை உருவாக்கியுள்ளதாக Phys.org தெரிவித்துள்ளது.
கடல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்கள் இந்த வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
30 Nov, 2023 | 04:40 PM
15 Nov, 2023 | 04:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS