.webp)
Colombo (News 1st) மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(27) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான வரி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவு 12 வரை வாகன வருமான வரி பத்திரங்களுக்காக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடு மத்திய மாகாணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
வாகன வருமான வரி பத்திரங்களை வழங்குவதற்கான கணினி தரவு கட்டமைப்பை மேம்படுத்துவதே இதற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.