மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

by Bella Dalima 27-09-2023 | 7:29 PM

Colombo (News 1st) பலத்த மழை காரணமாக மூன்று ஆறுகள் பெருக்கெடுக்கும் மட்டத்தை அடைந்துள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வலா கங்கை, குடா ஓயா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவை அவதான மட்டத்தை அடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.