.webp)
Colombo (News 1st) கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தொடர்ந்தும் தாமதமடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவயில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலொன்று கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்டுள்ளது.
இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ரயில் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் N.J.இந்திபொலகே தெரிவித்தார்.
எனினும், சேதமடைந்துள்ள தண்டவாளத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.