.webp)
Colombo (News 1st) ஈராக்கின் வட பகுதியில் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தீயில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் புதுமணத் தம்பதியும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஈராக்கின் வடக்கே நினிவே மாகாணத்திலுள்ள அல் ஹம்டானியா மாவட்டத்திலேயே நேற்று(26) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், வாண வேடிக்கைக்காக பட்டாசுகள் பற்றவைக்கப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமண மண்டபத்திலிருந்த தீப்பற்றக்கூடிய படலங்கள், தீ பரவ உதவியிருக்கலாமென அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.