நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை

முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை

by Staff Writer 27-09-2023 | 11:06 AM

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து, போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வாகனம் வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.