Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் இன்று(27) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
ஊவா, கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடைக்கிடையே மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.