வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - ஊற்றுப்புலத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

by Bella Dalima 26-09-2023 | 3:48 PM

Colombo (News 1st) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

ஊற்றுப்புலம் பகுதியில் வீதி அருகில்  இன்று (26) காலை  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

1990 அம்பியூலன்ஸ் சேவைக்கு  கிடைத்த தகவலுக்கு அமைய, சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் இவர் தாக்கி  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கோணாவில்  கிழக்கை சேர்ந்த 30 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.