Colombo (News 1st) மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு நேற்றிரவு பதிவாகியுள்ளது.
நேற்றிரவு 11.20 அளவில் 2.4 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
படல்கும்பர , மெனராகலை, நக்கல, மதுருகெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு அவதானிக்கப்பட்டதாக புவிச்சரிதவியல், சுரங்கப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் கடந்த சில மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி வெல்லவாய, புத்தல பிரதேசத்தில் 3 , 3.5 மெக்னிட்யூட் பதிவாகியிருந்தது.
பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வெல்லவாயவில் 2.3 மெக்னிட்யூட் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
அடுத்த நாள் காலை 8.45 தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் உணவட்டுனவில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.
புத்தல, பெல்வத்த, ஆனபெல்லம,வெல்லவாயவை அண்மித்த பகுதியில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி 3 , 3.5 மெக்னிட்யூட் நில அதிர்வு பதிவானது.
மார்ச் மாதம் 18 ஆம் திகதி கிரிந்த பலுடுபான, ஹாஜியார் பகுதியில் 2.6 மெக்னிட்யூட் அதிர்வு பதிவாகியிருந்தது.
திருகோணமலை - கோமரன்கடவெலவில் 1.3 மெக்னிட்யூட் நில அதிர்வு கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி பதிவானது.
கடந்த ஜூலை மாதம் 1 ஆம் திகதி தென்னிந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் அதன் தாக்கம் உணரப்பட்டது.