ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம்

2023 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் அணிக்கு வெள்ளிப்பதக்கம்

by Staff Writer 25-09-2023 | 2:17 PM

Colombo (News 1st) 2023 ஆசிய விளையாட்டு விழாவில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

இந்தியாவிற்கு எதிரான தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 19 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

சீனாவின் Hangzhou மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அதற்கமைய தொடரில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றதுடன் இலங்கை மகளிர் அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

ஏனைய செய்திகள்