மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2023 | 5:41 pm

Colombo (News 1st) மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் செயற்பாடுகளின் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம்(27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை வாகன வருமானவரி பத்திரம் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மாகாண வீதி போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்