2 சட்டமூலங்களையும் மீள பெறுமாறு வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை மீள பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

by Staff Writer 24-09-2023 | 6:22 PM

Colombo (News 1st) வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த 2 சட்டமூலங்களும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டவாக்கத்தை அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று(23) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தம்மிடமோ அல்லது துறைசார்ந்த எந்த தரப்பிடமோ கருத்துகளை வினவாமல் இந்த சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலங்களை அறிமுகம் செய்ய முன்னர், குறித்த தரப்பினருடன் கலந்துரையாடுவது மிகவும் முக்கியமானதெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.