.webp)
Colombo (News 1st) 2023 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலாவது பதக்கத்தை தனதாக்கியுள்ளது.
பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக இன்று(24) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, நாளை(25) இந்தியாவிற்கு எதிரான தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 75 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு விளையாடிய இலங்கை அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டி சீனாவின் Hangzhou நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.