50 என்ஜின்கள் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

50 என்ஜின்கள் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

50 என்ஜின்கள் பழுது: ரயில் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Sep, 2023 | 6:15 pm

Colombo (News 1st) 50 ரயில் என்ஜின்கள் பல்வேறு காரணங்களால் பழுதடைந்து காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டது. 

இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்கள் தொழில்நுட்பக் குறைபாடுகளால் பழுதடைந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.

நாளாந்தம் ரயில் போக்குவரத்திற்கு 75 என்ஜின்கள் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது 50 என்ஜின்களே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 20  என்ஜின்  இயந்திர தொகுதிகள்  சேவையில்  ஈடுபடவில்லை.

நாளாந்த ரயில் சேவைக்கு 90 இயந்திர தொகுதிகள் தேவையான நிலையில் தற்போது 70 என்ஜின் இயந்திர தொகுதிகளே சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்