.webp)
Colombo (News 1st) வாகன இறக்குமதி கட்டுப்பாடு தவிர்ந்த ஏனைய இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பான மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்தியாவசியமான இறக்குமதிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில், அந்நியச்செலாவணிக் கையிருப்பு வலுவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேணப்படும் 600 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளில், வாகனங்களுக்கான 270 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தவிர்ந்த ஏனைய கட்டுப்பாடுகளை நீக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த மாதம் குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு சந்தைக்குக் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் எதிர்காலத்தில் திறந்த சந்தைப் பொருளாதாரத்திற்கு உரிய வகையில் செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.