English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
23 Sep, 2023 | 4:48 pm
இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு சட்டவிரோதமான முறையில் சென்ற இளைஞர் ஒருவரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையை அகதி ஒருவர் வந்திறங்கியிருப்பதாக மீனவர்கள் மூலமாக கடலோரப் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து, கடலோர பொலிஸார் மீனவர்களின் உதவியுடன் மீன்பிடிப் படகு ஒன்றில் நடுக்கடல் மணல் திட்டிலிருந்த இளைஞரை மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு தனுஷ்கோடியில் மீட்கப்பட்டவராவார்.
மண்டபம் மறுவாழ்வு முகாமில் பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணையில் அவர் இலங்கையில் பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்றவர் எனவும், வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகம் சென்றுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தனுஷ்கோடி பொலிஸார் அவரை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
28 Nov, 2023 | 11:03 AM
28 Nov, 2023 | 07:39 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS