English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
22 Sep, 2023 | 3:29 pm
Colombo (News 1st) தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில் கடந்த மாதத்தில் பணவீக்கம் 2.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 வீதமாகக் காணப்பட்டது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் -2.5 வீதமாகக் காணப்பட்ட இலங்கையின் உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் -5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக பணவீக்கம் 62.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளின் பின்னர் முதன்மைக் கணக்கு இருப்பு உயர்வடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7 வீதமாக இருந்த பணவீக்கத்தை, 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6 வீதம் வரை குறைக்க முடிந்ததாகவும் பதில் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 Nov, 2023 | 09:55 PM
25 Nov, 2023 | 05:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS