உலக சாதனை படைத்த 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம்

உலக சாதனை படைத்த 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம்

உலக சாதனை படைத்த 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2023 | 3:36 pm

Colombo (News 1st) இங்கிலாந்து நாட்டில் Harrogate நகரில் நடத்தப்பட்ட கண்காட்சியில் 8.97 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய வெங்காயம் காட்சிப்படுத்தப்பட்டது. 

இந்த வெங்காயம் உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையை படைத்துள்ளது. 

முன்னதாக,  2014 ஆம் ஆண்டில் 8.4 கிலோ எடையுடைய வெங்காயமே  உலகின் மிகப்பெரிய வெங்காயம் என்ற சாதனையைக் கொண்டிருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

 

இலையுதிர்கால கண்காட்சியையொட்டி இந்த மரக்கறி போட்டி நடத்தப்பட்டது. 

இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த விவசாயி Gareth Griffin என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த இந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிப்படுத்தியுள்ளார். 

இதேவேளை, இந்த கண்காட்சியில் வேரில் விளையும் மரக்கறிகளை பலர் காட்சிப்படுத்தியிருந்தனர். 

Chris Parish என்பவர் 102 கிலோ எடையுள்ள ஒரு பெரிய பூசணிக்காயை காட்சிப்படுத்தியிருந்தார். இந்த பூசணிக்காய் புதிதாகப் பிறந்த யானையின் எடைக்கு சமமானது. 

விவசாயி ஒருவர் பல்வேறு காய்கறி பிரிவுகளிலும் வெற்றிபெற்றிருந்தார். அவரது முட்டைக்கோஸ், பார்ஸ்னிப், கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் அனைத்தும் அவருக்கு பரிசுகளை வென்று கொடுத்தன. 

Paul Proud with with his winning giant cabbage, parsnip, carrot, beetroot
 
ஹரோகேட்டில் தனது மிகப்பெரிய வெள்ளரிக்காய்க்கு பால் என்பவர் பரிசை வென்றிருந்தாலும், 2022-இல் Sebastian Suski என்பவர் வௌ்ளரிக்காய் பிரிவில் படைத்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. 

Sebastian Suski with world's longest cucumber

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்