லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2023 | 6:51 pm

Colombo (News 1st) லங்கா சதொச ஊடாக அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சோயா மீட் ஒரு கிலோகிராம் 45 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.

உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 290 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெத்தலி ஒரு கிலோகிராம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

வௌ்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 620 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும். 

ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பு 6 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 299 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்