English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
20 Sep, 2023 | 4:35 pm
Colombo (News 1st) பெருவில் நேற்று (19) முதல் 2 மாத காலத்திற்கு 544 மாவட்டங்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எல் நினோ (El Nino) நிகழ்வினால் அங்கு பெரும் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவிருப்பதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்க அந்நாட்டின் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் ஒருங்கிணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பில் பேசிய பெரு நாட்டு அதிபர் டினா பொலுவார்டே (Dina Boluarte) எல் நினோ நிகழ்வை எதிர்கொள்ள பன்னாட்டு கூட்டு முயற்சியும் ஒப்பந்தமும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய மற்றும் கிழக்கு பசுபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் – சில வருட கால இடைவெளிகளில் – ஒரு சமச்சீரற்ற நிலை உருவாகிறது.
இதன் காரணமாக அதிக வறட்சி, அதிக மழைப்பொழிவு என வானியல் சூழ்நிலை மாறி மாறி நிகழ்கிறது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களும் அதிகம் உருவாகின்றன. இந்நிகழ்வை "எல் நினோ" (El Nino) என சுற்றுச்சூழலியலாளர்கள் அழைக்கின்றனர்.
28 Nov, 2023 | 09:09 AM
22 Nov, 2023 | 03:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS