English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Sep, 2023 | 3:57 pm
California: மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் லாரா பரஜாஸ் (Laura Barajas) எனும் 40 வயதான பெண் ஒருவர் மீன் சாப்பிட்டதால் தனது உடல் உறுப்புகளை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவர் உள்ளூர் சந்தையில் திலப்பியா (Tilapia) என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. கை விரல்கள், பாதங்கள், கீழ் உதடு என்பன கறுப்பாக மாறியது. இதனால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவருக்கு சிறுநீரகமும் செயலிழந்தது.
மேலும், கை கால்கள் செயலிழந்து, லாரா பரஜாஸ் உயிருக்கு போராடி வருவதாக அவரது தோழி Anna Messina தெரிவித்துள்ளார்.
''லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக சமைத்து, தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால், இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார்''
என Anna Messina குறிப்பிட்டுள்ளார்.
லாரா பரஜாஸிற்கு தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு Vibrio Vulnificus எனும் பக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் நீர் வெப்பநிலை காரணமாக அமெரிக்காவில் Vibrio Vulnificus பக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக இம்மாத ஆரம்பத்தில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தினால் (Centers for Disease Control and Prevention) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Vibrio Vulnificus என்பது மெக்ஸிகோ வளைகுடாவின் வெப்பமான நீரில் வேகமாக வளரும் ஒரு பக்டீரியா ஆகும்.
இந்த பக்டீரியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 80,000 நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
24 Nov, 2023 | 05:00 PM
24 Oct, 2023 | 04:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS