English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
19 Sep, 2023 | 5:47 pm
Colombo (News 1st) இலங்கைக்கு வரவுள்ள சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளிக்கக்கூடாது என இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் S.ராமதாஸ் தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.
"சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள SHI YAN 6 உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையில், 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக S.ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
சீன உளவுக் கப்பலின் ஆராய்ச்சியானது, தென் மாநிலங்களை உளவு பார்க்கும் செயற்பாடு என்பதால், இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு இது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக S.ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி சீன கப்பலுக்கு தாம் அனுமதி அளிக்காதது போல இலங்கை அரசு காட்டிக்கொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடைசி நேரத்தில் சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு கண்டிப்பாக அனுமதி வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீன உளவுக் கப்பல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதுடன், பல நூறு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து நிலைகளையும் செயற்கைக்கோள் உதவியுடன் உளவு பார்க்கும் திறன் கொண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தென்னிந்தியாவில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து முக்கிய நிலைகளையும் சீனா உளவு பார்த்து தகவல்களை சேகரிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், Shi Yan 6 கப்பல் அந்தமான் தீவுகள் அருகிலிருந்து இலங்கை நோக்கி இன்று (19) வந்துகொண்டிருக்கின்றது.
கடல் பயண தரவுக்கட்டமைப்பிற்கு அமைய, குறித்த கப்பல் எதிர்வரும் 29 ஆம் திகதி SEA OF SRILANKA கடற்பரப்பை அண்மிக்கும் என கூறப்பட்டுள்ளது.
04 Dec, 2023 | 04:32 PM
04 Dec, 2023 | 02:42 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS