நைல் பெட்ரோலிய எண்ணெய் நிறுவன கோபுரம் தீக்கிரை

சூடான் தலைநகரின் அடையாளமான நைல் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தின் வானுயர் கோபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் தீக்கிரை

by Staff Writer 18-09-2023 | 3:38 PM

Colombo (News 1st) சூடான் தலைநகர் ஹார்ட்டூமில்(Khartoum) அந்நாட்டு இராணுவம் மற்றும் துணை இராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற உக்கிர மோதல்களைத் தொடர்ந்து, ஏராளமான கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

சூடான் தலைநகரின் அடையாளமாகத் திகழ்ந்த நைல் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தின் வானுயர் கோபுரமும் இதில் அடங்குகின்றது.

இந்த சம்பவம் மிகவும் துயர் மிக்கது என அந்த கட்டடத்தின் வடிவமைப்பாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் கார்ட்டூமில் வான் தாக்குதல்களும் தரைவழித் தாக்குதல்களும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சூடானில் இடம்பெற்று வரும் மோதலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.