ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா

by Staff Writer 17-09-2023 | 5:45 PM

Colombo (News 1st) 2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக இந்தியா மகுடம் சூடியது. 

மாபெரும் இறுதிப் போட்டியில் 10 விக்கெட்களினால் வெற்றி பெற்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தசுன் சானக்க, மதீஷ பத்திரன ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

ஏனைய வீரர்கள் ஒற்றை ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 50 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்த நிலையில், இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் 6 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் கைப்பற்றி இந்திய அணிக்கு வலு சேர்த்தனர்.

51 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆட்டமிழப்புகள் எதுவும் இன்று 6.1 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது.

இசான் கிசான் 23 ஓட்டங்களையும் சுப்மன் கில் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.