ஆசியக்கிண்ணம்: இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை

2023 ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி நாளை; இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை

by Bella Dalima 16-09-2023 | 7:03 PM

Colombo (News 1st) 2023 ஆம் ஆண்டு ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி  கொழும்பு R.பிரேமதாச மைதானத்தில்  நாளை (17) நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் இலங்கை அணி மற்றும் இந்திய அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கடந்த மாதம் 30 ஆம் திகதி 6 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம்  ஆண்டிற்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமானது.

ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் முதல் சுற்றில்  வௌியேறியதுடன், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இரண்டாம்  சுற்றுக்கு தகுதி பெற்றன.

சுப்பர் 4 சுற்றில்  பங்குபற்றிய முதல் இரண்டு ​ போட்டிகளில் வெற்றி  பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதன் பின்னர் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில்  2 விக்கெட்களால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசியக்கிண்ண வரலாற்றில் இந்தியா 7 தடவைகள் கிண்ணத்தை கைப்பாற்றியுள்ளது. இலங்கை அணி 6 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.