.webp)
Colombo (News 1st) ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம்(10) ஆரம்பமான போதிலும், மழையினால் தடைப்பட்டமை காரணமாக நேற்று(11) மீண்டும் போட்டியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நேற்று(11) போட்டி ஆரம்பிக்கப்பட்ட போது, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்தது.
விராத் கோலி 122 ஓட்டங்களையும் கே.எல்.ராகுல் 111 ஓட்டங்களையும் ரோகித் சர்மா 56 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதனடிப்படையில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினால் 128 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.