இறக்குமதி உருளைக்கிழங்கிற்கான வரி நீடிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி 4 மாதங்களுக்கு நீடிப்பு

by Staff Writer 10-09-2023 | 3:35 PM

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 08 ஆம் திகதி முதல் மேலும் 4 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு 50 ரூபா விசேட வர்த்தக பொருளுக்கான வரி, கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டிருந்தது.

6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையிலேயே வரி விதிக்கப்பட்டிருந்தது.