7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றி

ஆசியக்கிண்ணம்: சுப்பர் 4 சுற்றினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள பாகிஸ்தான்

by Staff Writer 06-09-2023 | 10:15 PM

ஆசியக்கிண்ண தொடரில் சுப்பர் 4 சுற்றினை பாகிஸ்தான் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்களினால் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

லாஹூரில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் பிரகாரம், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 38 . 4 ஓவர்கள் நிறைவில்  சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களை  மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் முஸ்பிகுர் ரஹீம் 64 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சகிப் அல் ஹசன் 53 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட்களை வீழ்த்தியதுடன், நசீம் சா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

194 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 39.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இமாமுல் ஹக் 78 ஓட்டங்களை பெற்றதுடன், மொஹம்மட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றார்.

ஆசியக் கிண்ண தொடரின்  சுப்பர் 4 சுற்றின் இரண்டாவது  போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.