உலகக்கிண்ண ரக்பி தொடரை ஔிபரப்பவுள்ள MTV Channel

2023 உலகக்கிண்ண ரக்பி தொடரை இலங்கையில் ஒளிபரப்புவதற்கான உரிமம் MTV Channel வசம்

by Bella Dalima 05-09-2023 | 5:54 PM

Colombo (News 1st) 2023 உலகக்கிண்ண ரக்பி தொடரை இலங்கையில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை MTV Channel தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.

செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை 7 வாரங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தொடரின் போட்டிகள் சக்தி TV, சிரச TV, TV1 அலைவரிசைகளில் ஔிபரப்பாகவுள்ளன.

அத்துடன், sirasatv.lk எனும் இணையத்தளத்திலும் போட்டிகள் நேரலையாக ஔிபரப்பப்படவுள்ளன.

பார்வையாளர்களின் நலன் கருதி, ரக்பி போட்டிகள் ஔிப்பதிவு செய்யப்பட்டு, மீள் ஔிபரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

உலகின் தலைசிறந்த இருபது அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி பிரான்ஸில் நடைபெறவுள்ளது. 

தற்போது நடைபெற்று வரும் ஆசியக்கிண்ண கிரிக்கெட், விரைவில் தொடங்க உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையாக ரக்பி உலகக்கிண்ண போட்டிகள்  ஒளிபரப்பப்படும்.

ரக்பி உலகக்கிண்ணத்தின் சகல போட்டிகளும் இலங்கை நேரப்படி இரவுப்பொழுதில் நடைபெறவுள்ளன.