.webp)
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய மற்றும் தென்னாபிரிக்க குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் பேரவை 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய குழாம் இன்று (05) அறிவிக்கப்பட்டது.
சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்ர ஜடேஜா, அக்ஸார் பட்டேல், குல்தீப் யாதவ், சர்துல் தாகுர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷிராஜ், மொஹமட் சமி ஆகியோர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆபிரிக்க குழாமும் இன்று அறிவிக்கப்பட்டது.
குயின்டன் டி கொக், ரீஸா ஹென்ரிக்ஸ், வென் டர் டசன், எய்டன் மக்ரம், ஹென்ரிக்ஸ் கிளாசன், டேவிட் மிலர், மார்கோ ஜென்சன், கெகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, அன்ரிட்ஜ் நொட்ஜி, சிசன்டா மகாலா, ஜெரால்ட் கோட்ஸே, கேஷவ் மஹாராஜ், டப்ரிஸ் ஷம்சி,
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.