U16 ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்டம்: இலங்கை தகுதி

இலங்கை, இந்திய அணிகள் 16 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்ட தொடருக்கு தகுதி

by Bella Dalima 01-09-2023 | 3:18 PM

Colombo (News 1st) இலங்கை, இந்திய அணிகள் 16 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்ட தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

தெற்காசிய வலயத்திற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.

தகுதிகாண் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடிய இலங்கை  62-55 கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இரண்டு அணிகளும் 16 வயதிற்குட்பட்ட ஆசியக்கிண்ண கூடைப்பந்தாட்ட தொடருக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.