இலங்கை குழாம் அறிவிப்பு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

by Bella Dalima 29-08-2023 | 5:21 PM

Colombo (News 1st) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மகேஸ் தீக்ஷன ஆகியோர் இலங்கை குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரண, கசுன் ராஜித, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷங்க ஆகியோரும் ஆசியக் கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (30) ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகின்றது. 

தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளதுடன், பாகிஸ்தானும் நேபாளமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் நாளை மாலை 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை மறுதினம் (31) பல்லேகலையில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை - பங்களாதேஷ்  அணிகள் மோதவுள்ளன. 

ஆசியக் கிண்ண தொடரின் போட்டிகளை TV1 தொலைக்காட்சியிலும் SIRASATV.LK இணையத்தளத்திலும் நேரடியாக பார்வையிட முடியும்.