.webp)
Colombo (News 1st) உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்றது.
இந்தியாவின் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவும் நோர்வேயின் மெக்னஸ் கார்ல்ஸனும் (Magnus Carlsen) இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.
இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் நேற்று (22) நடைபெற்ற போது, இருவரும் அபார திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனால் முதல் சுற்று ஆட்டம் சமநிலையில் நிறைவடைந்தது.
இந்நிலையில், இரண்டாம் சுற்றும் சமநிலையில் முடிவடைந்துள்ளது.
நாளை (24) மூன்றாவது சுற்று நடைபெறவுள்ளது
ஐந்து தடவைகள் உலக சம்பியனாகியுள்ள மெக்னஸ் கார்ல்ஸன் உலகின் முதல் நிலை சதுரங்க வீரராக திகழ்கின்றார்.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியொன்றில் மெக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியா சார்பில் தெரிவான இரண்டாவது போட்டியாளர் என்ற சிறப்பையும் சதுரங்க தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவான இளம் போட்டியாளர் என்ற சிறப்பையும் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.