இலங்கை குழாம் நாடு திரும்பியது

இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியது

by Staff Writer 16-08-2023 | 11:41 AM

Colombo (News 1st) இளையோருக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குழாம் இன்று(16) அதிகாலை நாடு திரும்பியது.

தொடரில் ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயத்தின் அயோமால் அகலங்க வெள்ளிப்பதக்கம் வென்றதுடன் போட்டியை அவர் 51.61 செக்கன்களில் கடந்திருந்தார். 

ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் திக்வெல்ல விஜித மத்திய மகா வித்தியாலயத்தின் நிலுபுல் சஹசர வெண்கலப் பதக்கம் வென்றார்.

தொடரில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்ட இலங்கை அணி தரப்படுத்தலில் 21 ஆவது இடத்தை பிடித்துள்ளது.