மிகப்பெரிய கலையரங்கிற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர். R . ராஜமகேந்திரன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

மிகப்பெரிய கலையரங்கிற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர். R . ராஜமகேந்திரன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2023 | 3:00 pm

Colombo (News 1st) இரத்மலானை ஸ்டைன் கலையக வளாகத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கலையரங்கிற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர், அமரர். R . ராஜமகேந்திரன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிரச TV-யின் 25 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தொலைக்காட்சியில் புதுப்பிம்பங்களை உருவாக்கிய சிரச TV இன்றும் மக்களின் முதற்தர அலைவரிசையாக உள்ளது.

சர்வதேச தரப்படுத்தலுடன் கூடிய சிரச லக்ஷபதி நிகழ்ச்சியானது தற்போது இலங்கையர்கள் மத்தியில் பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும்

அண்மைக்காலமாக சிரச தொலைக்காட்சியின் The Voice ஊடாக இலங்கை இளைஞர்களின் குரல்கள் சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

இவ்வாறு பல புதுமைகளை ஏற்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள சிரச டிவி இன்று 25 ஆவது பிறந்த தினத்தை தமது ரசிகர்களோடு கொண்டாடுகின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்