வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள அச்சுவேலி விவசாயி

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ள அச்சுவேலி விவசாயி

எழுத்தாளர் Bella Dalima

09 Jun, 2023 | 4:44 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அச்சுவேலியை சேர்ந்த விவசாயி ஒருவர் வெய்காய செய்கையை இலகுவாக்கும் வகையில், வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரமொன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த இயந்திரம் மூலம் தேவையற்ற செலவீனங்களை குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை இந்த நபர் கண்டுபிடித்துள்ளார்.

இதன் மூலம் பல ஏக்கர் நிலப்பரப்பில் வெங்காய செய்கையினை முன்னெடுத்து, அதில் நல்ல விளைச்சலையும் பெற்றுள்ளார்.

இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக வடமாகாண விவசாய பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இன்றைய தினம் நடுகை செய்யும் முறை காண்பிக்கப்பட்டது.

இந்த  இயந்திரத்தை எவ்வாறு இயக்குவது , அதன் மூலம் எப்படி நடுகையினை மேற்கொள்வது போன்ற விடயங்கள் பயனாளிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  வட மாகாண விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், முன்னாள் விவசாய பணிப்பாளர், விவசாய அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்