பெட்ரோலிய சந்தைக்குள் நுழைய மேலும் 3 நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியது ஏன்: அரசாங்கம் தெளிவூட்டல்

பெட்ரோலிய சந்தைக்குள் நுழைய மேலும் 3 நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியது ஏன்: அரசாங்கம் தெளிவூட்டல்

பெட்ரோலிய சந்தைக்குள் நுழைய மேலும் 3 நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியது ஏன்: அரசாங்கம் தெளிவூட்டல்

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2023 | 7:58 pm

Colombo (News 1st) நாட்டின் பெட்ரோலிய சந்தையை மேலும் மூன்று நிறுவனங்களுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. 

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நேற்று (08) வெளியிடப்பட்ட அறிக்கை, 2022 ஆம் ஆண்டுக்கான மின்சக்தி , எரிசக்தி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்திறன் அறிக்கை என்பவற்றில் இந்த காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தெளிவுபடுத்தலுக்கு அமைய, கடந்த வருடம் எரிபொருள் நெருக்கடிக்கு வித்திட்ட முதன்மை காரணியாக பெட்ரோலிய கூட்டுத்தாபனமும் இந்திய எண்ணெய் நிறுவனமும் போதிய அந்நியச்செலாவணியை வழங்குவதற்கான இயலுமையை கொண்டிருக்கவில்லை என்பதாகும்.

இந்தியன் எண்ணெய் நிறுவனம் தேசிய வங்கிகள் மூலம் பெறப்பட்ட அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தி , எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேவையான அந்நியச் செலாவணி இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்கு குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் முடியாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sinopec, R M Parks Inc மற்றும் United Petroleum ஆகிய நிறுவனங்களுக்கு நாட்டின் பெட்ரோலிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு இந்த பின்புலத்திலேயே சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்