அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது

அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது என்கிறார் குமார வெல்கம

by Bella Dalima 09-06-2023 | 3:09 PM

Colombo (News 1st) ராஜபக்ஸக்களின் பிடிக்குள் இருப்பதனாலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய அரசாங்கத்திற்கு கூட செல்ல முடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  தெரிவித்தார்.

நவலங்கா சுதந்திரக் கட்சி பத்தரமுல்லையில் நேற்று (08) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தான் 40 வருடங்களாக ராஜபக்ஸவுடன் இருந்ததாகவும், அதனால் இது தொடர்பில் தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு ஏற்றவாறு அமைச்சரவையை முன்னெடுத்துச்செல்ல முடியாத நிலையிலேயே ஜனாதிபதி தற்போது உள்ளதாக குமார வெல்கம தெரிவித்தார். 

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டை தனியாக வழிநடத்திச்செல்ல முடியாது எனவும் அவர் கூறினார். 

அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதன்போது சவால் விடுத்தார்.