.webp)
Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி, கொட்டா வீதி, நாவல வீதி ஊடாக சரண வீதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் இன்று(08) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுத்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.