தேர்தலை நடத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தல்

தேர்தலை நடத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தல்

தேர்தலை நடத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

08 Jun, 2023 | 6:27 pm

Colombo (News 1st) உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

நீதியை அநீதியாக மாற்றவும், ஆட்சியை சர்வாதிகாரமாக்கவும், சட்டத்தை மாற்றி சமூகத்தை வழிநடத்தவும் இன்றைய தலைவர்கள் கைகோர்த்து செயற்படுவதாகவும் அத்தகையவர்களை வெளியேற்றுவதற்கு அனைவரும் தயாராக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

இவ்வாறான ஆட்சியாளர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் எனவும் அவர்களை வௌியேற்றுவது அவசியம் எனவும் கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்