தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே மீண்டும் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே மீண்டும் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே மீண்டும் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2023 | 9:28 am

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) மீண்டுமொரு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இன்று(08) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையிலேயே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்