சர்வதேச சமுத்திர தினம் இன்று(08)

சர்வதேச சமுத்திர தினம் இன்று(08)

by Staff Writer 08-06-2023 | 6:46 AM

Colombo (News 1st) இன்று(08) சர்வதேச சமுத்திர தினமாகும்.

''மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்'' என்பதே இவ்வருட சர்வதேச சமுத்திர தின தொனிப்பொருளாகும்.

மனித செயற்பாடுகளாலும் கவனயீனத்தினாலும் இன்று சமுத்திரங்கள் அழிந்து வருகின்றன.

மனித குலத்தின் வாழ்வாதாரத்தையும் பூமியிலுள்ள ஏனைய அனைத்து உயிரினங்களையும் சமுத்திரங்கள் ஆதரிக்கின்றன.

பூமிக்கு தேவைப்படும் 50 வீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன.

சமுத்திரங்கள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கான முக்கிய ஆதாரமாகவுள்ளது.

இத்துணை வளங்களை எமக்கு அள்ளி வழங்கும் சமுத்திரம் இன்று, ஆபத்தான நிலையில் இருக்கின்றது என்றால் அது பிழையில்லை.

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சமுத்திரங்களுக்கு விடுவிப்பதால், இன்று சமுத்திரத்தில் வாழும் உயிரினங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் விடுவிக்கப்படுகின்றன.

SEA OF SRI LANKA எனும் கடற்பிராந்தியத்தில் வருடாந்தம் 0.24 - 0.64 மில்லியன் தொன் பிளாஸ்ட்டிக் பொருட்கள் விடுவிக்கப்படுகின்றன.

எமது சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.